பகீர்..! சிறுவனை கடித்துக் குதறி ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற முதலை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

Uncategorized

பகீர்..! சிறுவனை கடித்துக் குதறி ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற முதலை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி ஒரு நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த சுனில் (12) என்ற சிறுவன், தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தனது உறவினருடன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆற்றில் இருந்த முதலை ஒன்று திடீரென சிறுவனைத் தாக்கி, கடித்துக் கொன்று தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர் உடனடியாக கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் ஆற்றில் பல மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிறுவனின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in