LATEST NEWS
பகீர்!.. நொடிப் பொழுதில் வெடித்த மின்சாரப் பெட்டி.. தீப்பிழம்பாக மாறிய நபர்… வேடிக்கை பார்த்த கூட்டம்.. நடுக்க வைக்கும் சிசிடிவி வீடியோ…!!
டெல்லியின் பரபரப்பான கரோல் பாக் சந்தைப் பகுதியில் உள்ள மின்சார மீட்டர் பெட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர மின்சுற்று வெடிப்புச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மீட்டர் பெட்டியில் ஏற்பட்ட பழுதினை இரண்டு நபர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பெரு வெடிப்பு ஏற்பட்டு தீப்பிழம்புகள் மளமளவென எழும்பின. இதில் எதிர்பாராத விதமாக ஒரு நபர் முழுமையாகத் தீயில் சிக்கிக்கொண்டார். உடல் கருகிய நிலையில் அந்த நபர் வலியால் தெருவில் துடித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் யாரும் அவருக்கு உதவ முன்வராமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது பார்ப்போரை நெஞ்சம் பதற வைக்கிறது.
A horrific short circuit explosion was caught on CCTV in Delhi’s Karol Bagh market showing two men inspecting a faulty electric meter box
Suddenly a massive blast erupted instantly engulfing one man in flames
As the victim writhed in agonizing pain on the street onlookers… pic.twitter.com/JjFv1LItDS— Ramesh Tiwari (@rameshofficial0) July 19, 2026
இந்தக் கொடூரமான விபத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிகப் பகுதிகளில் மின்சாரத் துறை எந்த அளவிற்கு அலட்சியமாகச் செயல்படுகிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், ஆபத்தான மின்கம்பிகளையும் பழுதடைந்த மீட்டர் பெட்டிகளையும் திறந்தவெளியில் தொங்கவிட்டதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த சிசிடிவி காட்சி, மின்சாரத் துறையின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியையும், சக மனிதனின் துயரத்தைக் கண்டும் உதவ மறுக்கும் பொதுமக்களின் அநாகரிகப் போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
