LATEST NEWS
“சதமடிச்சது ரோகித்துதான்… ஆனா பேட்டு என்னோடது..!” ‘படையப்பா’ ஸ்டைலில் கெத்து காட்டிய ஷர்துல்..!!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 110 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 138 ரன்கள் குவித்து அசத்தினார். இது அவருடைய 34-வது ஒருநாள் சதமாகும். மேலும், இங்கிலாந்து மண்ணில் தனது 8-வது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்த அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா சரியாக ரன் குவிக்காததால், லார்ட்ஸில் நடைபெறும் 3ஆவது போட்டியுடன் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று வதந்திகள் பரவின. இருப்பினும், இந்த செய்திகளுக்கு பிசிசிஐ உடனடியாக மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்த நிலையில், ரோகித் சர்மா இப்போட்டியில் அதிரடி சதமடித்து விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
ரோகித் சர்மாவின் இந்த வரலாற்றுச் சதம் குறித்துப் பேசிய சக வீரர் ஷர்துல் தாக்கூர், “எஸ்.எஸ் நிறுவனம் எனக்கு வழங்கிய நல்ல தரமான பேட்களைப் பார்த்து, ரோகித் சர்மா என்னிடம் இரண்டு பேட்களைக் கேட்டார். இந்திய அணிக்கு எத்தனையோ வெற்றிகளைப் பெற்றுத் தந்த அவருக்கு எனது பேட்டைக் கொடுத்ததில் பெருமை கொள்கிறேன். எனது பேட்டைப் பயன்படுத்தி அவர் லார்ட்ஸில் சதமடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார.
