“ஸ்டைல் ஓகே… காமராஜர் எளிமை எங்கே…?” அனல் பறக்கும் விமர்சனங்களில் சிக்கும் CM விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டைல் ஓகே… காமராஜர் எளிமை எங்கே…?” அனல் பறக்கும் விமர்சனங்களில் சிக்கும் CM விஜய்..!!

Published

on

தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் ஆடை மற்றும் ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்டை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர். கோட் சூட், வெள்ளிக்கிழமைகளில் வேட்டி-சட்டை என விதவிதமான தோற்றங்களில் வலம் வரும் விஜய், சமீபத்தில் சைதாப்பேட்டை சமூக நீதி விடுதி மற்றும் சேத்துப்பட்டு திடக்கழிவு மேலாண்மை மையம் ஆகியவற்றில் அதிரடியாக நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சேத்துப்பட்டு ஆய்வின் போது விஜய் நீல நிற சட்டையை ‘டக்கிங்’ செய்து அணிந்திருந்த பிரபல லூயிஸ் விட்டான் பிராண்ட் பெல்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பெல்ட்டின் விலை என்னவென்று ரசிகர் ஒருவர் ‘க்ரோக்’ செயலியிடம் கேட்க, இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.66,000 இருக்கும் என அது பதிலளித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் இந்த பிராண்ட் பெல்ட்கள் ரூ.20,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement

தமிழ்நாட்டிற்கு இப்படியொரு மிக ஸ்டைலிஷான முதலமைச்சர் கிடைத்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி குஷியாகி வருகின்றனர். அதேவேளையில், அரசியல் களத்தில் இருக்கும் விஜய், பெருந்தலைவர் காமராஜரைப் போல ஆடை மற்றும் ஆடம்பர விஷயங்களில் எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் கருத்துகளும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in