BIG BREAKING: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது பண்ணுங்க… துணைநிலை ஆளுநர் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG BREAKING: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது பண்ணுங்க… துணைநிலை ஆளுநர் அதிரடி உத்தரவு..!!

Published

on

டெல்லியில் தீவிரமடைந்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், பொது அமைதிக்கும் மாநிலப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்யும் முழு அதிகாரமும் டெல்லி காவல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக வழக்கமான பிணை சட்டங்கள் உடனடியாகப் பொருந்தாது என்பதோடு, நீதிமன்ற விசாரணை அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் இன்றி ஓராண்டு காலம் வரை சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in