LATEST NEWS
“கேன்சரை பரப்பும் மீன்கள்..!” ஆய்வில் வெளியான மாபெரும் பேரதிர்ச்சி… உறைந்துபோன விஞ்ஞானிகள்.. உலகையே அதிரவைத்த புதிய ஆய்வு..!!
அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களுக்கு இடையே நேரடியாகப் புற்றுநோய் பரவுவதை அறிவியல் உலகம் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளது. ஒரு மீனிடம் இருக்கும் புற்றுநோய் செல்கள் மற்றொன்றிற்கு நேரடியாகத் தொற்றும் திறன் கொண்டவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உயிரினங்களுக்கு இடையே தொற்றுநோயைப் போலப் புற்றுநோய் பரவுவது இயற்கை சூழலில் மிகவும் அரிதானது என்பதால், இக்கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், இந்த கெளுத்தி மீன்களை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவுவதற்கான எந்தவொரு சான்றுகளும் ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், மனித ஆரோக்கியத்திற்கு இதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்துத் தெளிவான முடிவை எட்டுவதற்காக, விஞ்ஞானிகள் இது தொடர்பான தீவிர ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
