“டாய்லெட் போயிட்டு வரேன்..” ! தாய் செய்த பகீர் காரியம்.. 16 நாள் பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம். நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“டாய்லெட் போயிட்டு வரேன்..” ! தாய் செய்த பகீர் காரியம்.. 16 நாள் பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம். நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியைச் சேர்ந்த ஷாகினா என்பவர், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 நாட்களுக்கு முன் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின், அங்கிருந்த மற்றொரு பெண்ணிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு கழிப்பறைக்குச் சென்ற ஷாகினா, நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குழந்தையை மீட்ட காவல்துறையினர், கோழிக்கோடு தாய்-சேய் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையை விட்டுச் சென்ற ஷாகினாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர் மருத்துவமனையில் பதிவு செய்திருந்த தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. அந்தப் பெண் யார், எந்தக் சூழ்நிலையால் தனது பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றார் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in