“அடப்பாவமே..! கார் அடியில் பைக் மாட்டிக்கிட்டதை கூட கவனிக்கலையா..?!” அரை கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பைக்… விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவமே..! கார் அடியில் பைக் மாட்டிக்கிட்டதை கூட கவனிக்கலையா..?!” அரை கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பைக்… விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி..!!

Published

on

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மீரா சாலையில், அதிவேகமாக வந்த ஊபர் பிளாக் சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். மக்கள் கூச்சலிட்டு நிறுத்த முயன்றும் தப்பிக்க நினைத்த ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். தூக்கமின்மையால் ஓட்டுநர் ஆதில் தஸ்லிம் அன்சாரி வாகனம் ஓட்டும்போது தூங்கியதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் மதுபோதை எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அது நிராகரிக்கப்பட்டது.

இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள் காவல்துறையினர் குற்றவாளியான ஓட்டுநரைக் கைது செய்து, விபத்துக்குள்ளான டொயோட்டா ஹைலேண்டர் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பிரீமியம் சேவைகளுக்கான ஊபர் பிளாக் பிரிவில் பதிவு செய்யப்பட்ட இந்த வாகனம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in