“என் புள்ள விஜி…” மெட்ரோ ரயிலில் முதல்வரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட மூதாட்டி… இணையத்தை உருக வைக்கும் பாசக் காட்சிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் புள்ள விஜி…” மெட்ரோ ரயிலில் முதல்வரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட மூதாட்டி… இணையத்தை உருக வைக்கும் பாசக் காட்சிகள்..!!

Published

on

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்களோடு மக்களாக சென்னை மெட்ரோ ரயிலில் திடீர் பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தியபோது, அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவரிடம் காட்டிய பாசம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ வைத்துள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து நந்தனம் வரை வழக்கமான பயணிகளைப் போல டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில் பெட்டிக்குள் நுழைந்த முதலமைச்சரைக் கண்டு அங்கிருந்த பயணிகள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.

அப்போது முதலமைச்சர் விஜய்யை மிக அருகில் பார்த்த ஒரு மூதாட்டி பேரானந்தம் அடைந்து, அவரது கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அன்பு முத்தமிட்டார். “என் புள்ள விஜி…” என உருகிய அந்தப் பாட்டி, எவ்வித தடையுமின்றி முதலமைச்சரின் தோளில் சாய்ந்து தனது எல்லையற்ற தாய் பாசத்தை வெளிப்படுத்தினார். மூதாட்டியின் இந்தத் தூய்மையான அன்பை முதலமைச்சர் விஜய்யும் இன்முகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டு புன்னகைத்தார்.

Advertisement

https://twitter.com/polimernews/status/2082425572437991530/video/1

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையகத்தில் இயக்கப் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற முதலமைச்சர் விஜய், பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த எளிய பயணத்தை மேற்கொண்டார். சக பயணிகளுடன் அமர்ந்து இயல்பாக உரையாடியபடியே அவர் பயணித்த காட்சிகள் மற்றும் பாசமழை பொழிந்த மூதாட்டியின் இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in