LATEST NEWS
அடச்சீ.. உணவகத்தில் கழிப்பறைத் தண்ணீரா..? சமையலுக்குப் பயன்படுத்திய கொடூரம்… வீடியோ வைரலானதும் களத்தில் இறங்கிய காவல்துறை..!!
சுவையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உணவகங்களை நாடிச் செல்லும் உணவுப் பிரியர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் ஒரு அருவருப்பான சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையல் மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பணிகளுக்காகப் பொதுக் கழிப்பறையில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்திய கொடூரம் அம்பலமாகியுள்ளது. நோய்களைப் பரப்பும் வகையில் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த அநாகரிகச் செயல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, பொதுமக்கள் மற்றும் உணவுப் பிரியர்களிடையே பெரும் அருவருப்பையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மனித உடலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்த கழிப்பறைத் தண்ணீரை உணவில் பயன்படுத்திய இந்த விவகாரம், உணவுப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, உணவகத்திற்குப் பூட்டு போட்டதோடு உரிமையாளர் மீது வழக்குப் பதிவும் செய்துள்ளனர். வெளி உணவகங்களில் சாப்பிடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்ட நடவடிக்கைகளும், தொடர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
