LATEST NEWS
“பெண்களை சீண்டினால் இதுதான் கதி.. ! ஈவ்டீசிங் செய்த ஆசாமிகளுக்கு பெண்கள் கொடுத்த மரண பயம்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
மலைமகள்கள் அநீதியைக் கண்டு ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரகாண்ட் மாநிலம் முக்தேஸ்வர் அருகில் உள்ள சதௌலி கிராமத்தில், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு நபர்களுக்கு உள்ளூர் பெண்மணிகள் ஒன்றுதிரண்டு தக்க பாடம் புகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இரு நபர்களும் அப்பகுதியில் பெண்களைத் தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
पहाड़ की बेटियां चुप नहीं रहतीं !
उत्तराखंड,मुक्तेश्वर के सतौली गांव में छेड़छाड़ करने वाले दो यूपी के मनचलों को स्थानीय महिलाओं ने सबक सिखा दिया !
बिच्छू घास से पीटा, मुंह पर मोबिल पोता, कपड़े फाड़े !!
https://t.co/DR5rVBSlcY— Yogita Bhayana योगिता भयाना (@yogitabhayana) August 1, 2026
இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் பெண்கள், அந்த இரு நபர்களையும் சுற்றி வளைத்து, ‘பிச்சூ காஸ்’ எனப்படும் கடுமையான தோல் எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும் மூலிகைச் செடியால் அடித்து விளாசியுள்ளனர். அதோடு நிறுத்தாமல், அவர்களின் சட்டைகளைக் கிழித்து, முகத்தில் கருப்பு மொபில் ஆயிலைப் பூசி ஊரே பார்க்கும்படித் தகுந்த தண்டனை வழங்கி துரத்தியடித்துள்ளனர். பெண்களின் இந்த தைரியமான மற்றும் அதிரடியான பதிலடி அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
