LATEST NEWS
“காவிரியில் இல்லாத வேகம் கைதில் ஏன்..?” ஆளுங்கட்சியை விளாசிய சீமான்..!!
காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத தீவிரமான வேகத்தை, கைது நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி காட்டுவது தமிழ்நாட்டின் அரசியல் நிலைக்கு ஒரு சாபக்கேடு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உதயநிதியை உடனடியாகக் கைது செய்யத் துடிக்கும் காவல்துறை, தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை முற்றிலும் மறந்துவிட்டு, மேடைகளில் நாகரிகமற்ற முறையில் கருத்துகளை உதயநிதி பேச வேண்டிய தேவை எதுவுமில்லை என்றும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
