மகனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி வச்சிருக்காரு… நினைச்சா மாசம் ₹10,000 கோடி சுருட்டலாம்… ஆனா எங்கள் முதல்வர் அப்படி இல்ல..மேடையில் கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி வச்சிருக்காரு… நினைச்சா மாசம் ₹10,000 கோடி சுருட்டலாம்… ஆனா எங்கள் முதல்வர் அப்படி இல்ல..மேடையில் கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா…!!

Published

on

அப்பா முன்னாள் முதலமைச்சராக இருந்த காரணத்தினால்தான், இன்றைக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தனது மகனைப் பட்டாபிஷேகம் செய்து உட்கார வைத்திருப்பதாக ஆதவ் அர்ஜுனா கடுமையாகச் சாடினார். பிறப்பால் உருவான இந்தத் திமிரும் ஆணவமுமே காரணம் என்றும், இந்த ஆணவத்திற்குப் பாடம் புகட்டும் வகையில்தான் அவர்களை வெறும் 57 எம்.எல்.ஏ-க்களோடு மக்கள் எதிர்க்கட்சியாக உட்கார வைத்துள்ளார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களிடம் 5 லட்சம் ரூபாய் கூடக் கிடையாது என்றும், தங்களது அமைச்சர்களிடம் மொத்தமாகக் கூட்டினாலும் 25 லட்சம் ரூபாய் கூடக் இருக்காது என்றும் குறிப்பிட்டுக் கட்சியின் எளிமையைச் சுட்டிக்காட்டினார். தங்களது முதலமைச்சர் நினைத்தால் மாதம் 10 ஆயிரம் கோடி ரூபாயைச் சுலபமாக வசூல் (Collection) பண்ண முடியும் என்ற நிலை இருந்தும், அவர் அதைச் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

Advertisement

அதிகாரமும் அனைத்து வாய்ப்புகளும் கையில் இருந்தும் நேர்மையாக இருப்பதுதான் மிகப்பெரிய விஷயம் என்று குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, தங்களது தலைவரின் நேர்மையை உயர்த்திப் பேசி மேடையில் அதிரடியாகக் கர்ஜித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in