LATEST NEWS
குஷியோ குஷி..! அண்ணன் சீர் திட்டம் மூலம் 8 கிராம் தங்க நாணயம்… 1 பட்டுப்புடவை வழங்கப்படும்… பெண்களுக்கு பட்ஜெட்டில் சூப்பர் குட் நியூஸ்..!!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டில், திருமணப் பெண்களுக்கு உதவும் வகையில் ‘அண்ணனின் சீர் திட்டம்’ என்ற புதிய மெகா திட்டம் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்தை மாநிலம் முழுவதும் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் ₹812 கோடி நிதியை அள்ளிவீசியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பயனடையும் பெண்களுக்குத் திருமணச் சீராக 8 கிராம் (1 சவரன்) தங்க நாணயம் மற்றும் ஒரு உயர்தரப் பட்டுப்புடவை ஆகியவை தவெக அரசார்பாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் தவெக அரசு, பெண்களின் திருமணப் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த ‘அண்ணனின் சீர் திட்டத்தைக்’ கொண்டு வந்துள்ளது.
நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் இன்று தாக்கல் செய்துள்ள இந்த முதல் பட்ஜெட்டில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ₹812 கோடி மதிப்பிலான ‘அண்ணனின் சீர் திட்டம்’ ஒட்டுமொத்தப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.
