BREAKING:முதியவர்களுக்கு அடித்தது மாபெரும் ஜாக்பாட்..!” தேடி வரும் இலவச மருத்துவம் & மருந்துகள்.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:முதியவர்களுக்கு அடித்தது மாபெரும் ஜாக்பாட்..!” தேடி வரும் இலவச மருத்துவம் & மருந்துகள்.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..!!

Published

on

மாநில பட்ஜெட்டில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறப் பஞ்சாயத்துகளுக்கே நேரடியாகச் சென்று முதியவர்களுக்குத் தேவையான இலவச உடல் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் வழக்கம் போல வழங்கப்படும். இதன் மூலம் முதியவர்கள் மருத்துவமனைகளுக்கு அலைவது தவிர்க்கப்பட்டு, அவர்களுக்கான மருத்துவச் சேவைகள் இருப்பிடத்திலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒவ்வொரு நடமாடும் சிகிச்சை மையத்திலும் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள முதியோர்களின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான உடனடிப் பராமரிப்பை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்காக அரசு சார்பில் பட்ஜெட்டில் ₹33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in