“அடச்சீ நீயெல்லாம் சாமியாரா..!” 5 ஸ்டார் ஹோட்டலில் பூட்டிய அறையில் கைகளை கட்டி வைத்து … கனடா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பூசாரி செய்த அருவருப்பான செயல்.. அம்பலமான அதிர்ச்சிப் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் சாமியாரா..!” 5 ஸ்டார் ஹோட்டலில் பூட்டிய அறையில் கைகளை கட்டி வைத்து … கனடா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பூசாரி செய்த அருவருப்பான செயல்.. அம்பலமான அதிர்ச்சிப் பின்னணி..!!

Published

on

கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த வெளிநாடு வாழ் இந்திய இளம் பெண் ஒருவரிடம், லூதியானாவில் உள்ள ராடிசன் புளூ நட்சத்திர விடுதியில் வைத்துப் பாலியல் அத்துமீறல் முயற்சி நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ராகுல் சூத் என்ற மாந்திரீகன், அந்தப் பெண்ணிடம் பேய் பிடித்துள்ளதாகவும், அதை விரட்ட சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார். மாந்திரீகனின் வார்த்தைகளை நம்பி இந்தியாவிற்கு வந்த அந்தப் பெண்ணிற்காக, லூதியானா விடுதியில் அறை ஒன்று பதிவு செய்யப்பட்டுப் பூஜைகள் தொடங்கப்பட்டன.

பூஜை நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மாந்திரீகன் ராகுல் சூத் அந்த இளம் பெண்ணின் இரண்டு கைகளையும் பலவந்தமாகப் பிடித்து, அவரது உடலில் பல்வேறு இடங்களில் அத்துமீறித் தொட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மாந்திரீகனின் தவறான எண்ணத்தைப் புரிந்து கொண்டு, உடனடியாக அந்த அறையிலிருந்து தப்பி ஓடிவந்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in