LATEST NEWS
“திக் திக் திக்.. ! அலறல் சத்தம்… அடர்ந்த காட்டுக்குள் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்..” தீயில் கருகிய 4 உடல்கள்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!!
பிரேசிலில் நடைபெற்ற கொடூரமான ஹெலிகாப்டர் விபத்தில், பைலட் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோ அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், அது உடனடியாகத் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து பைலட் மற்றும் பயணித்த மூன்று பெண்களின் உடல்களும் முற்றிலும் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த இச்சம்பவம் கொலம்பியா மற்றும் பிரேசில் நாடுகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
