LATEST NEWS
“என் மருமகனுக்கு 25 பொண்டாட்டி” ரியல் எஸ்டேட் அதிபர்னு நம்பி ஏமாந்தேன்.. என் மகளை ஏமாத்திட்டான்… மாமனார் எம்.எல்.ஏ கொடுத்த புகாரால் சிக்கிய பலதார மன்னன்..!!
உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்திலுள்ள சேவ்தா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஞான திவாரி, தனது மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை மும்பையைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் என்று பொய் கூறி ஏமாற்றி, தனது மருத்துவப் பட்டதாரியான மகளை 2024-ல் திருமணம் செய்து கொண்டதாக எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திருமணத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்கள் மூலம் விசாரித்த போதுதான், மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை பல்வேறு குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணையில், பிரகர் திரிவேதி போலி அடையாள அட்டைகளைப் (ID) பயன்படுத்தி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பெண்களைத் ஏமாற்றி, இதுவரை சுமார் 25 திருமணங்களைச் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. பெண்களைக் காதலிப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்துள்ளதாகவும், இந்த மோசடிக்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் எம்.எல்.ஏ புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த மோசடிச் சம்பவத்தால் தனது குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்தப் போலி குடும்பத்துடனான உறவை எம்.எல்.ஏ துண்டித்துள்ளார். இந்த புகாரின் பேரில், ரியூசா காவல் துறையினர் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட தந்தை மற்றும் மகனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
