பா.ம.க.வில் அடுத்தகட்ட மோதல்..! ராமதாஸ் ஓய்வு… அன்புமணி கையில் கட்சி… மகள் ஸ்ரீகாந்தி போட்ட மெகா ஸ்கெட்ச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பா.ம.க.வில் அடுத்தகட்ட மோதல்..! ராமதாஸ் ஓய்வு… அன்புமணி கையில் கட்சி… மகள் ஸ்ரீகாந்தி போட்ட மெகா ஸ்கெட்ச்..!!

Published

on

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான கருத்து வேறுபாடுகளின்போது, ராமதாஸ் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தியும் கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று வந்தார். ஆனால், சட்டசபை தேர்தலுக்குப் பிறகு இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்ட சூழலில், ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்களை உருவாக்கியது.

இதற்கிடையே, ராமதாஸின் ஆதரவாளர்களாக இருந்த பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அன்புமணியின் பக்கம் நகரத் தொடங்கியதால், பா.ம.க.வின் அமைப்பு ரீதியான கட்டமைப்புக்குள் அன்புமணியின் கை ஓங்கியுள்ளது. இதனால் கட்சியில் அன்புமணியின் செல்வாக்கு மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்தச் சூழலில், ஸ்ரீகாந்தி தனியாகப் புதிய அமைப்பைத் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கத் திட்டமிட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது அன்புமணியுடன் பயணிக்கும் சில ராமதாஸ் ஆதரவாளர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காதபோதிலும், புதிய அமைப்பைத் தொடங்கும் முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in