LATEST NEWS
கூச்சமே இல்லையா உங்களுக்கு..? அன்னைக்கு நீங்க பேசிய வீடியோவ உங்க பிள்ளைங்ககிட்ட காட்டி விளக்கம் அளிக்க முடியுமா.? உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட தவெக எம்எல்ஏ முஸ்தபா…!!
திமுகவிற்கு கூச்சமே இல்லை என்றும், ஏற்கனவே இதுபோன்று பேசிப் பேசியே தங்களுக்குள் கொத்துப் பரோட்டா போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து திமுக சட்டத்துறை அணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் பற்றி உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சுட்டிக்காட்டிய முஸ்தபா, “உதயநிதி பேசியதை, அவர் தனது குழந்தைகளுடன் அமர்ந்து வீடியோவில் காட்டி விளக்கம் அளிக்க முடியுமா?” என்று காட்டமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதன் மூலம் உதயநிதியின் அரசியல் நாகரிகமற்ற பேச்சை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினை ‘டம்மி பாவா தான்’ என்று மிகத் தீவிரமாக விமர்சித்த முஸ்தபா, தவெக அரசின் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றால் அதை எதிர்கொள்ள துணிவில்லாமல் ஏன் பயப்படுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மிசா, எமர்ஜென்சியை பார்த்ததாகக் கூறும் திமுகவினர், தற்போதைய சட்டபூர்வ விசாரணைக்கு அஞ்சுவது ஏன் என்றும் அவர் தனது பேச்சில் விவரித்துள்ளார்.
