LATEST NEWS
“ஒட்டுமொத்தக் கடனையும் தள்ளுபடி பண்ணுங்க… இல்லன்னா…! விவசாய சங்க தலைவரின் பகிரங்க மிரட்டல்… தமிழகத்தில் வெடித்த பரபரப்பு..!!
முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசு, தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்யும் வகையில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் தீவிரப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
