“உனக்கு சீட் இல்ல.. உழைச்ச நிர்வாகிக்கு தான் சீட்” CM விஜயிடம் சீட் கேட்ட லோகேஷ் கனகராஜ்..? கிணத்துக்கடவு தொகுதியின் பகீர் பின்னணியை உடைத்த அமைச்சர் ஆனந்த்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உனக்கு சீட் இல்ல.. உழைச்ச நிர்வாகிக்கு தான் சீட்” CM விஜயிடம் சீட் கேட்ட லோகேஷ் கனகராஜ்..? கிணத்துக்கடவு தொகுதியின் பகீர் பின்னணியை உடைத்த அமைச்சர் ஆனந்த்..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய சுவாரசியமான தகவல் ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கோவை கிணத்துக்கடவு தொகுதி குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பேரவையில் பேசிய அமைச்சர், முதலமைச்சர் விஜய்யை வைத்துப் படம் இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சீட் கேட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், “திரைத்துறையை விட, அந்தப் பகுதிக்காகப் பல வருடங்களாக உழைத்த மக்கள் இயக்க நிர்வாகிக்கே தேர்தலில் போட்டியிட முன்னுரிமை” எனக் கூறி முதலமைச்சர் விஜய் அவரது கோரிக்கையை அன்போடு மறுத்துவிட்டதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

அமைச்சர் ஆனந்தின் இந்த மேடைப் பேச்சு வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அந்தப் பிரபல இயக்குநர் யார் மற்றும் தொகுதி எது என்பது குறித்து தீவிரமாக ஆராயத் தொடங்கியுள்ளனர். முதலமைச்சர் விஜய்யை இயக்கிய முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் தவெக-வில் சீட் கேட்டார் என்றும், அவர் போட்டியிட நினைத்த அந்தத் தொகுதி கோவை கிணத்துக்கடவு தான் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

Advertisement

தற்போது கிணத்துக்கடவு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ), பல ஆண்டுகள் மக்கள் இயக்கத்தில் களப்பணியாற்றிய தவெக அமைச்சர் விக்னேஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், சினிமா செல்வாக்கை விட தங்களது இயக்க நிர்வாகிகளின் உழைப்புக்கே முதலமைச்சர் விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாக தவெக தொண்டர்கள் இந்தத் தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in