“முதலமைச்சர் விஜய்யின் பிளானுக்கு முற்றுப்புள்ளி” அதிரடியாக கூட்டணியை உறுதி செய்த திருமாவளவன்.. அதிர்ச்சியில் தவெக தலைமை..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முதலமைச்சர் விஜய்யின் பிளானுக்கு முற்றுப்புள்ளி” அதிரடியாக கூட்டணியை உறுதி செய்த திருமாவளவன்.. அதிர்ச்சியில் தவெக தலைமை..!!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்துடன் தான் கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் திடீரென அறிவித்திருப்பது, திமுகவை விட தவெக தலைமைக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வரவிருக்கும் தேர்தலில் பாமகவை தங்களது கூட்டணிக்குள் இழுக்கவே, தவெக அரசு அண்மையில் சௌமியா அன்புமணியின் தந்தைக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாமக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், அங்கு விசிக நீடிக்க முடியாது என்ற அரசியல் கணக்கு நிலவி வந்தது.

இந்தச் சூழலை முன்கூட்டியே கணித்த திருமாவளவன், தவெகவுடனான கூட்டணி தொடரும் என அதிரடியாக அறிவித்து முதலமைச்சர் விஜய்யின் அரசியல் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பாமகவை தவெக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு விசிக முட்டுக்கட்டை போட்டுள்ளது. தவெக-பாமக கூட்டணியைத் தடுத்து, தவெக கூட்டணியில் விசிக தனது இடத்தை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் திருமாவளவன் எடுத்துள்ள இந்த ராஜதந்திர நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in