“சிஎம்-க்கு தொடர்பு இருக்கா..?” போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் SM அட்மின் கைது.. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பகீர் கேள்விகள்.. கேரள அரசியலில் பெரும் பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சிஎம்-க்கு தொடர்பு இருக்கா..?” போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் SM அட்மின் கைது.. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பகீர் கேள்விகள்.. கேரள அரசியலில் பெரும் பூகம்பம்..!!

Published

on

கேரளாவில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு ‘ஆபரேஷன் தூஃபான்’என்ற தீவிர அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் காசர்கோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டில், சுமார் 130 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளைக் காரில் கடத்தி வந்ததாக முகமது ஹுசைன் மற்றும் அப்துல் சலாம் உள்ளிட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முகமது ஹுசைன், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனின் சமூக ஊடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்று எதிர்க்கட்சியான சிபிஐ மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கு இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in