உயிரே போச்சு..! “5 மாத கர்ப்பிணியான பள்ளி மாணவி” பல மாதங்களாக ஆசிரியரின் பாலியல் அத்துமீறல்… கருக்கலைப்பு செய்தபோது பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

உயிரே போச்சு..! “5 மாத கர்ப்பிணியான பள்ளி மாணவி” பல மாதங்களாக ஆசிரியரின் பாலியல் அத்துமீறல்… கருக்கலைப்பு செய்தபோது பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

Published

on

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பொறுப்புத் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த காலித் உசேன் என்பவர், அதே பள்ளியில் படித்த மாணவியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவி 5 மாத கர்ப்பமான நிலையில், ஆசிரியர் தனது சகோதரர் தாரிக் என்பவரின் உதவியுடன் சட்டவிரோதமாக மாத்திரைகளைக் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.

இதனால் மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில் மாணவி 5 மாத கர்ப்பமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவத்தைக் கண்டித்து சத்ரூ மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நீதிகேட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் காலித் உசேன் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரும் அவரது சகோதரரும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோதக் கருக்கலைப்புக்கு மாத்திரைகளை வழங்கிய மருந்தக உரிமையாளர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in