“இந்தியா ஒரு வரம்” இரவு 10 மணிக்கு கணவருக்கு உடம்பு சரியில்ல… நள்ளிரவில் நடந்த சம்பவம்… பிரிட்டன் பெண் டாக்டர் வெளியிட்ட வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்தியா ஒரு வரம்” இரவு 10 மணிக்கு கணவருக்கு உடம்பு சரியில்ல… நள்ளிரவில் நடந்த சம்பவம்… பிரிட்டன் பெண் டாக்டர் வெளியிட்ட வைரல் வீடியோ..!!

Published

on

பிரிட்டனின் என்.எச்.எஸ் மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் பெண் மருத்துவர் தீபாஞ்சலி சர்மா, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்துப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதை பாராட்டி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெளிநாடுகளில் வாழ்வது மட்டுமே சிறந்தது என நினைப்பவர்களுக்கு, இந்தியாவில் உள்ள நன்மைகளைத் தனது சொந்த அனுபவத்தின் மூலம் அவர் விளக்கியுள்ளார்.

அவரது கணவருக்கு இரவு நேரத்தில் திடீரெனக் கடுமையான தலைவலியும், அடுத்தடுத்து வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த தீபாஞ்சலி, இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்று தனது கணவருக்குத் தேவையான மருந்துகள் மற்றும் ஊசிகளை எவ்வித சிரமமும் இன்றி உடனடியாக வாங்கியுள்ளார். இந்தியாவில் இதுபோன்ற இக்கட்டான சூழலில் மருந்துகளை எளிதாகப் பெற முடிவது ஒரு பெரிய வரம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcgcCHJNn6y/?utm_source=ig_web_button_share_sheet

அதே சமயம், தான் பிரிட்டனில் இருந்திருந்தால் ஒரு மருத்துவராக இருந்தபோதிலும் மருந்து வாங்குவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்று ஒப்பீட்டுக் கூறியுள்ளார். அங்கெல்லாம் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் எப்போதுமே கூட்ட நெரிசலாக இருப்பதால் உடனடி உதவி கிடைப்பது கடினம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் நாம் சாதாரணமாக நினைக்கும் பல விஷயங்கள் வெளிநாடுகளில் பெரும் போராட்டமாக மாறுவதாகவும், எந்தவொரு நாடும் 100 சதவீதம் நிறைவானது அல்ல என்றும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in