CRIME
“பார்த்தாலே உடம்பு நடுங்குது…!”நடுரோட்டில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்… துடிதுடித்த 36 வயது வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் லைவ் வீடியோ..!!
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள புர்லா நகரின் கிர்பா சாக் பகுதிக்கு அருகே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பயங்கரச் சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 36 வயதான முகமது அனிஷ் என்பவர் உடலில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனிப்பட்ட தகராறு மற்றும் இருவருக்கு இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு, முன்விரோதம் காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
https://twitter.com/nextminutenews7/status/2093680943043379656/video/1
இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான ஜார்சுகுடா மங்களா பஜார் பகுதியைச் சேர்ந்த ராஜா சுவாமி என்பவரைக் காவல் துறையினர் புர்லா காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாகக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட கொடூர ஆயுதமும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலையாளி துப்பாக்கியால் சுடும் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகித் தற்போது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
