CRIME
“அய்யோ கொடுமையே.. காதலனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் அடித்த காதலி.. அண்ணனுடன் சேர்ந்து நடத்திய வெறியாட்டம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில், காதலி மற்றும் அவளது சகோதரரின் கொடூரத் தாக்குதலால் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த அதிரவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மோனிகா என்ற பெண் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, தனது காதலனான ஷேராராம் என்பவரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்திய பிறகு, அந்த இடத்திலேயே அசந்து தூங்கியுள்ளனர். அந்தச் சமயத்தில், மோனிகாவின் சகோதரன் எதிர்பாராதவிதமாக அங்கு வந்து, அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டு கடுமையான ஆத்திரமடைந்துள்ளார்.
https://twitter.com/madanmohansoni/status/2093765958448148550/video/1
இதனைத் தொடர்ந்து, தனது சகோதரனுடன் கைகோர்த்த மோனிகா, தன் காதலன் என்றும் பாராமல் ஷேராராமை நிர்வாணமாக்கி கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். தடிகளாலும் கட்டைகளாலும் அவரது தலை மற்றும் பிறப்புறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களில் அவர்கள் இரக்கமின்றி அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மிருகத்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்த ஷேராராம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் சொந்தக் காதலியே தன் சகோதரனுடன் சேர்ந்து காதலனை அடித்துக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
