அமைச்சர் முத்துசாமியுடன் மோதல்.. மாவட்டப் பொறுப்பு பறிக்கப்பட்டதால் திமுகவிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்… விரைவில் தவெகவில் ஐக்கியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமைச்சர் முத்துசாமியுடன் மோதல்.. மாவட்டப் பொறுப்பு பறிக்கப்பட்டதால் திமுகவிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்… விரைவில் தவெகவில் ஐக்கியம்..!!

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், திமுகவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகித்த இவர், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இருப்பினும், ஈரோடு மாவட்டத்தில் திமுக மூத்த அமைச்சரான சு. முத்துசாமிக்கும் இவருக்கும் இடையே ஏற்கனவே கடுமையான அரசியல் உட்கட்சிப் பூசலும் உரசலும் நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் தகவல் கசிந்ததால்தான் சமீபத்தில் அவரது ஈரோடு மாவட்ட திமுக பொறுப்பு பறிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in