CRIME
“ஐயோ இது என்ன கொடுமை..! நாற்காலிகள் பறக்க.. சொந்தங்கள் சிதறி ஓட..!” கணவன் குடும்பத்தாரை உறவினர்களோடு வந்து வெளுத்து வாங்கிய மனைவி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிவானகர் சிவன் கோயிலில், திருமண மண்டபத்திற்குள்ளேயே புகுந்து கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் மனைவி மற்றும் அவரது வீட்டார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமகுண்டம் கோதாவரிகனி பகுதியைச் சேர்ந்த சௌமியா என்ற பெண்ணிற்கும், சிரவண் குமார் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுப் பிரிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிரவண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சௌமியா தரப்பில் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
https://twitter.com/pulsenewsbreak/status/2094317175050014902/video/1
இந்நிலையில், சிரவண் குமாரின் சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவானகர் சிவன் கோயிலில் முகூர்த்தம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருமண விபரத்தை எப்படியோ தெரிந்துகொண்ட சௌமியா, தனது குடும்பத்தினரைத் திரட்டிக்கொண்டு அதிரடியாகத் திருமண மண்டபத்திற்குள் புகுந்துள்ளார். அங்கு மணமக்களின் உறவினர்கள் முன்னிலையிலேயே, தனது கணவன் சிரவண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சௌமியா தரப்பினர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து கொடூரமான முறையில் அடித்துத் துவம்சம் செய்துள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் திருமணத்திற்கு வந்திருந்த மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், பாதிக்கப்பட்ட சிரவண் குமார் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சௌமியா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
