LATEST NEWS
12 வாரங்கள் கிடையாது… இனி 365 நாட்கள் லீவ்! பெண் அரசு ஊழியர்களுக்கு வெளியான மாஸ் அறிவிப்பு..! தமிழக அரசின் அதிரடி அரசாணை..!!
தமிழக அரசு, பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொண்டால் ஓராண்டுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் துறை சார்ந்த அமைச்சர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியாகி நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் பெண் அரசு ஊழியர்களுக்கான 3-வது குழந்தைக்கான பேறுகால விடுமுறை நாள்கள் 12 வாரங்களில் இருந்து 52 வாரங்களாக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பணியில் இருக்கும் தாய்மார்கள் தங்களின் குழந்தையைப் பராமரிக்கவும், உடல் நலனைப் பேணவும் இந்த 365 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெரிதும் உதவியாக இருக்கும்.
