CRIME
1 இல்ல 2 இல்ல 20 க்கும் மேல் உடலுறவு..! 40 ஆண்டுகால ரகசியம் உடைந்தது… பள்ளியில் மாணவர்களுடன் அத்துமீறிய 65 வயது ஆசிரியை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
லண்டனில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியை சாலி-ஆன் போவன் (65) என்பவர், நீதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். வட லண்டனில் உள்ள ஒரு ஆண்கள் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இவர் பணியாற்றியபோது, 14 முதல் 15 வயதுடைய இரு மாணவர்களிடம் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், அவர் மீதான ஏழு பாலியல் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர் ஒருவர் சாட்சியமளிக்கையில், தான் மாணவராக இருந்தபோது ஆசிரியை போவனுடன் 20 முதல் 30 முறை பாலியல் உறவில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவரைத் தனது காதலியாக நினைத்ததாகவும், இந்த உறவை வெளியில் சொல்லக் கூடாது என ஆசிரியை தன்னை அமைதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தனது கல்வியைப் பாதித்ததோடு, தான் ஒரு பெற்றோராக மாறிய பிறகே தனக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவரும் ஆசிரியைக்கு எதிராகச் சாட்சியமளித்ததோடு, வகுப்பறையில் பாலியல் சார்ந்த புத்தகங்கள் மற்றும் நிலைகள் குறித்து ஆசிரியை விவாதித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், ஆசிரியை போவன் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக மறுத்து, மாணவர்களுடன் நட்பாக மட்டுமே பழகியதாக வாதிட்டார். நடுவர் குழுவின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ள அவருக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
