CRIME
“அய்யோ கொடுமையே.. மாமனாருக்கு 26 கத்தி குத்து..” 6 லட்ச ரூபாய் கூலிப்படையை ஏவி… கோடீஸ்வர மருமகள் போட்ட அசுர சதித்திட்டம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு கோடீஸ்வரப் பெரும் தொழிலதிபர் குடும்பத்தில், சொகுசு வாழ்க்கைக்கும் நள்ளிரவு பார்ட்டிகளுக்கும் மாமனார் வினீத் மனுச்சா விதித்த கட்டுப்பாடுகளைப் பொறுக்க முடியாமல், அவரது சொந்த மருமகள் ஷாலு பாபி என்பவள் 6 லட்ச ரூபாய் கூலிப்படை ஒப்பந்தம் பேசித் தனது மாமனாரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள நெஞ்சைப் பதறவைக்கும் நரக வாழ்வியல் விபரீதம் ஒட்டுமொத்த தேசத்தையும் உறைந்து போகச் செய்துள்ளது. அவர் விபத்தில் இறந்தது போல மாற்று அல்லது தலையணையால் முகத்தை அமுக்கிக் கொன்றுவிடு, நெஞ்சுவலி என்று நினைத்துக் கொள்வார்கள். பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறித் தனது வீட்டு வேலைக்காரன் விஷாலை இந்த மாபெரும் கள்ளச் சதித்திட்டத்திற்குள் இழுத்துள்ளார். அந்த வேலைக்காரன் விஷால் தனது நண்பன் ராஜ்கிஷோரை 30 ஆயிரம் ரூபாய்க்கு ஆசை காட்டி இதில் இணைத்துக் கொண்டு, மாலையைத் தொடுக்கும் பெயரில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து படுக்கையறையில் பதுங்கியிருந்து, மாமனார் வினீத் மனுச்சா உள்ளே வந்த அடுத்த சில விநாடிகளிலேயே கத்தியால் மொத்தம் 26 முறை கொடூரமான முறையில் குத்திக் துவம்சம் செய்து படுகொலை செய்துள்ளனர்.
கொலைக்கு பின் கைகால்களைக் கழுவிவிட்டு சாதாரணமாகத் தப்பியோடிய இந்தக் கூலிப்படை வேலைக்காரர்களைக் காவல்துறையினர் அசாத்திய துணிச்சலுடன் போலீஸ் என்கவுண்டர் மூலம் அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்த பின்னரே, இந்த கோடீஸ்வரக் குடும்பத்தின் அசிங்கமான முகத்திரை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டது. மாமனார் வினீத் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பதும், பண விவகாரங்களில் கணக்குக் கேட்பதும் தனக்குத் தடையாக இருப்பதாகக் கருதி மருமகள் அரங்கேற்றிய இந்த அசுரத்தனமான கொலைவெறி நாடகம், உயர்தர சொகுசு வீடுகளில் வாழ்ந்தாலும் மனிதர்களின் மனநிலை எவ்வளவு அசிங்கமாகவும், கீழ்த்தரமாகவும் மாறக்கூடும் என்ற கசப்பான வாழ்வியல் உண்மையை உலகிற்கு அப்பட்டமாக உணர்த்தியுள்ளது. தற்பொழுது கொடூர மருமகள் ஷாலு மற்றும் இரண்டு வேலைக்காரர்களையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்து அசுர வேகத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
