“காதலனுடன் தான் வாழ்வேன்..!” என அடம்பிடித்த மனைவி.. அடுத்த நொடியே போலீஸ் கணவன் எடுத்த துணிச்சலான முடிவு.. உறைந்து போன நெட்டிசன்கள்.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காதலனுடன் தான் வாழ்வேன்..!” என அடம்பிடித்த மனைவி.. அடுத்த நொடியே போலீஸ் கணவன் எடுத்த துணிச்சலான முடிவு.. உறைந்து போன நெட்டிசன்கள்.!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் மாலிஹாபாத் பகுதியில், பிஆர்டி காவலர் ஒருவர் தனது மனைவியின் அசாத்திய பிடிவாதத்தைக் கண்டு, அவருக்கும் அவரது காதலனுக்கும் தானே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ள விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பேராதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பாதிக்கப்பட்ட அந்தப் பிஆர்டி காவலருக்கும் அந்தப் பெண்ணுக்கும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில மாதங்கள் வரை இவர்களது குடும்ப வாழ்க்கை மிகவும் கச்சிதமாகச் சென்ற போதிலும், அதன் பிறகு அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்குச் சென்ற நொடிக் கட்டத்தில், அவர் தனது காதலனுடன் அநாகரிகமாகக் கையும் களவுமாகத் கணவனிடம் மாட்டியுள்ளார்.

இதனைக் கண்டு நிலைகுலைந்து போன கணவன் மற்றும் இருதரப்புக் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்குப் பக்குவமான முறையில் பல ஆலோசனைகளை வழங்கித் திருத்த முயன்றுள்ளனர். ஆனால் அந்தப் பெண் தனது காதலனுடன் மட்டுமே வாழ்வேன் என பிடிவாதத்துள்ளார். இதனால் வேறு வழியின்றி மன உளைச்சலின் உச்சத்திற்குச் சென்ற அந்தப் பிஆர்டி காவலர், சற்றும் தார்மீகப் பொறுப்பை இழக்காமல் துணிச்சலுடன் தனது மனைவியை அவரது காதலனுக்கே சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in