LATEST NEWS
“இது என்ன கொடுமை..” வெள்ளப் பெருக்கிலும் உயிரைப் பணையம் வைத்துப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் நிலவும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, கைகளில் புத்தகங்களை ஏந்தியபடி பிஞ்சுக் குழந்தைகள் படகுகளில் அமர்ந்து உயிரைப் பணையம் வைத்துப் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை அரங்கேறியுள்ளது. கல்வி என்பது அடிப்படை வசதியாக இருக்க வேண்டிய சூழல் மாறி, இந்த இரு மாநிலக் குழந்தைகளுக்கு அது தினசரி எதிர்கொள்ளும் ஒரு மாபெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. வெள்ள நீர் சாலைகளையும் பாலங்களையும் மூழ்கடித்துள்ள நிலையிலும், தங்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகக் குழந்தைகள் தங்களின் வாழ்வா சாவா போராட்டத்தை இந்த ஆபத்தான படகுப் பயணங்கள் மூலம் மேற்கொள்கின்றனர்.
பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய அரசு நிர்வாகக் கட்டமைப்புகள், இன்னும் கோப்புகளின் பின்னால் மட்டுமே நகர்ந்து கொண்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் இயற்கை பேரிடர் சார்ந்த கேள்வி மட்டுமல்ல; ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக மாறும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளியுள்ள ஒட்டுமொத்த அரசு சிஸ்டத்தின் அலட்சியப் போக்கையே இது அம்பலப்படுத்துகிறது. இந்த அவல நிலையை மாற்றி, வெள்ளக் காலங்களிலும் நுகர்வோரான ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்க போர்க்கால அடிப்படையில் நிரந்தர உள்கட்டமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
