“அய்யோ நெஞ்சே பதறுது.. ராட்டினம் சுற்ற ஆரம்பித்த 5-வது வினாடி..” காதுகீறக் கேட்ட அலறல் சத்தம்.. 25 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘அந்த’ ஒரு கொடூர விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ நெஞ்சே பதறுது.. ராட்டினம் சுற்ற ஆரம்பித்த 5-வது வினாடி..” காதுகீறக் கேட்ட அலறல் சத்தம்.. 25 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘அந்த’ ஒரு கொடூர விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள புனேஷ்வர் கோவில் திருவிழா பொருட்காட்சியில், ராட்டினத்தில் இளம்பெண் ஒருவரின் தலைமுடி சிக்கி உச்சந்தலையின் தோல் முழுவதுமாக பிய்ந்து வந்த கொடூரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புல்சவாங்கி பகுதியைச் சேர்ந்த பாலி மரோட்டி (25) என்ற இளம்பெண் அங்கிருந்த கைகளால் இயக்கப்படும் ‘ஜெயண்ட் வீல்’ ராட்டினத்தில் ஏறியுள்ளார். ராட்டினம் சுற்ற ஆரம்பித்த சில வினாடிகளிலேயே அவரது தலைமுடி எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் சுழலும் பேரிங்கில் சிக்கிக் கொண்டதால், அவர் வலியால் பயங்கரமாகக் கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

ஆனால் ராட்டினம் வேகமாகச் சுழன்றதால் உடனடியாக நிறுத்த முடியாமல் போகவே, பெண்ணின் தலைமுடி இழுக்கப்பட்டு உச்சந்தலையின் தோல் அப்படியே மொத்தமாகப் பிய்ந்து தனியாக வந்துவிட்டது. இந்த கொடூரக் காட்சியைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், பலத்த காயமடைந்த பாலி மரோட்டி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு, திருவிழா ராட்டினங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்த பொதுமக்களின் கடுமையான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in