“வா தாத்தா சாக்லேட் தாரேன்” பக்கத்துக்கு வீட்டு சிறுமியை நைசாக அழைத்துச் சென்று.. 60 வயது காமக்கொடூரன் செய்த காரியம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வா தாத்தா சாக்லேட் தாரேன்” பக்கத்துக்கு வீட்டு சிறுமியை நைசாக அழைத்துச் சென்று.. 60 வயது காமக்கொடூரன் செய்த காரியம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில், 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் சுவர்னகர் என்ற அந்த முதியவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார். மாசற்ற அந்தச் சிறுமியைத் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று, யாரும் இல்லாத நேரத்தில் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் அழுதுகொண்டே நடந்த கொடுமையைக் கூற, அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் முதியவர் தினேஷ் சுவர்னகர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக முயன்ற குற்றவாளியை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in