“என் பொண்டாட்டிய பாக்க எதுக்குடா வர்ற” நள்ளிரவில் மனைவியைச் சந்திக்க வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை… கணவன் நடத்திய கொலைவெறித்தாக்குதல்.. மதுரையில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் பொண்டாட்டிய பாக்க எதுக்குடா வர்ற” நள்ளிரவில் மனைவியைச் சந்திக்க வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை… கணவன் நடத்திய கொலைவெறித்தாக்குதல்.. மதுரையில் அதிர்ச்சி..!!

Published

on

மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே, தெய்வேந்திரன் (28) என்ற இளைஞர் நேற்று இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிலைமான் போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கொலை நடந்த போது ஏற்பட்ட சண்டையில் குற்றவாளிகளில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என போலீசார் கணித்தனர். அதன்படி நடத்திய சோதனையில், வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisement

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கொடைக்கானலைச் சேர்ந்த தெய்வேந்திரன், சின்ன உடைப்பு பகுதியில் உள்ள ராஜபாண்டியின் மனைவி பானுப்பிரியாவைச் சந்திக்கச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவர் பானுப்பிரியாவைச் சந்தித்துவிட்டு பெரியார் நகர் வழியாக ஊர் திரும்பியபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கணவர் ராஜபாண்டியும் நண்பர் ராஜேஷும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

தெய்வேந்திரனுடன் வந்த மேலூரைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும், கொலையாளிகளுக்கும் இடையே நடந்த மோதலில்தான் ராஜேஷுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கள்ளத்தொடர்பு காரணமாக நடந்ததா? அல்லது இதற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் பகை இருக்கிறதா என்பது குறித்து சிலைமான் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in