CRIME
அடக்கடவுகளே.. நடுரோட்டில் வாயைப் பிளந்த மரணக்குழி.. டெலிவரி பாய்க்கு நேர்ந்த பயங்கர விபரீதம்.. ஷாக் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மாவ் ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் பகுதியில், சாலையில் சென்றுகொண்டிருந்த டெலிவரி பாய் ஒருவர் பைக்கோடு ராட்சத பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞர் தனது பைக்கில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு வழக்கம்போல சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே எந்தவொரு எச்சரிக்கை பலகையும் இன்றி ஆபத்தான முறையில் இருந்த ஒரு பெரிய ராட்சத பள்ளத்தை அவர் எதிர்பாராதவிதமாக கவனிக்கவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக், அந்தப் பள்ளத்திற்குள் பாய்ந்ததில் அவரும் பைக்கோடு சேர்ந்து உள்ளே விழுந்து சிக்கிக்கொண்டார்.
பயங்கரமான இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்ற பொதுமக்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த டெலிவரி பாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்ட பொதுமக்கள், எப்படியோ கஷ்டப்பட்டு அந்த இளைஞரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கான்பூரின் மோசமான சாலை அவல நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
