“இதென்ன புது கதையா இருக்கு..?!” ஓராண்டு ரகசிய காதல்.. ஹோட்டலில் கள்ளக்காதலர்கள் செய்த வேலை.. பொதுமக்கள் கொடுத்த ‘அதிர்ச்சி’ ட்ரீட்.. வைரலாகும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இதென்ன புது கதையா இருக்கு..?!” ஓராண்டு ரகசிய காதல்.. ஹோட்டலில் கள்ளக்காதலர்கள் செய்த வேலை.. பொதுமக்கள் கொடுத்த ‘அதிர்ச்சி’ ட்ரீட்.. வைரலாகும் சம்பவம்..!!

Published

on

பிகார் மாநிலம் ஜெஹானாபாத் மாவட்டத்தில், டெம்போவில் பயணம் செய்தபோது டிரைவருடன் காதல் வயப்பட்ட திருமணமான பெண், ஓட்டலில் சிக்கியதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பொதுமக்களே முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ள விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர் டெம்போ ஓட்டி வந்துள்ளார். ஒருமுறை அந்தப் பெண் இவரது டெம்போவில் ஏறியபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கண் அசைவு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த டெம்போ டிரைவருக்கும் ஏற்கனவே திருமணமாகி, 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண பந்தத்தைத் தாண்டி இந்த ஜோடி கடந்த ஓராண்டாகத் தங்களது ரகசியக் காதலைத் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு ஓட்டலில் ரகசியமாகச் சந்தித்துக் கொண்டபோது, அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் கையும் களவுமாக மாட்டித் தவித்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த பொதுமக்கள், உடனடியாக அதிரடி முடிவெடுத்து, அவர்கள் சிக்கிய அதே இடத்திலேயே இருவருக்கும் அங்கேயே ஸ்பாட்டிலேயே முறைப்படி திருமணத்தை ஏற்பாடு செய்து நடத்தி வைத்தனர். இந்த வினோதமான காதல் கதையும், மக்கள் நடத்திய திடீர் திருமணமும் ஜெஹானாபாத் பகுதியில் தற்போது பெரும் பேச்சாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in