LATEST NEWS
“ஐயோ பாவம்… வாயில்லா ஜீவனுக்கு இந்த நிலைமையா..?” அமைதியா இருந்த நாயை ஆற்றில் வீசிய கொடூரம்..! இணையத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் ஒரு பெண் நாயைப் பாலத்தில் இருந்து சேதி ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேபாள நாட்டின் பஜாங் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்ரித்வி நகராட்சியின் சைன்பூர் பகுதியில் அமைந்துள்ள பங்கோடக் பாலத்தில் நடந்துள்ளது. பஜாங்கைச் சேர்ந்த நபின் பாண்டே என்பவர் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். செப்டம்பர் 2-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தின் போது தான் நேரில் இருந்ததாகவும், தனது பணிச்சுமை காரணமாகவே வீடியோவைப் தாமதமாகப் பதிவேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை எடுத்த நபின் பாண்டே கூறுகையில், திருவிழாவின் போது புகைப்படங்கள் எடுக்கப் பாலத்திற்குச் சென்றபோது, அந்தப் பெண் நாயை ஆற்றில் தூக்கி வீச முயன்றதைக் கண்டு அவரைத் தடுக்க முயன்றதாகக் கூறினார். ஆனால் அந்தப் பெண் அவரது பேச்சைக் கேட்கவில்லை. அந்த நாய் ஒருவரைக் கடித்துவிட்டதாகப் பெண் நியாயம் கூறியபோதிலும், தான் கால்நடை மருத்துவப் படிப்பு படித்தவர் என்பதால் நாய் மிகவும் அமைதியாகவே காணப்பட்டதை உணர்ந்ததாகவும், வேறு ஏதோ காரணத்திற்காகவே அது தூக்கி வீசப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாண்டே சந்தேகிக்கிறார். ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நாய் நீரின் பலத்த ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அது உயிர பிழைத்ததா என்பது பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து பஜாங் மாவட்டக் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய மாவட்டக் காவல் அலுவலகத் தகவல் அதிகாரி தீபக் பிஷ்ட், இச்சம்பவம் தொடர்பாகக் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். வீடியோவில் உள்ள பெண்ணை அடையாளம் கண்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், விசாரணையின் முடிவிலேயே நாயை ஆற்றில் வீசியதற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.
