CRIME
“ஐயோ கடவுளே…! கிணற்றின் அருகே கிடந்த செருப்புகள்..” இரு உடன்பிறந்த சகோதரர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் விளையாடச் சென்ற இரு உடன்பிறந்த சகோதரர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருடேக் காவல் எல்லைக்குட்பட்ட கஸ்டேகா பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவரின் மகன்களான விஷ்ணு (8) மற்றும் துளசி (10) ஆகிய இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினருடன் இணைந்து அவர்களைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.
தேடுதல் வேட்டையின் போது, சிறுவர்களின் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு கிணற்றின் அருகே அவர்களின் உடைகளும், செருப்புகளும் அனாதையாகக் கிடப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறுவர்கள் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உள்ளூர் இளைஞர்கள் கிணற்றில் இறங்கித் தேடியபோது இரு சிறுவர்களின் உடல்களும் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள குருடேக் போலீஸார், சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
