LATEST NEWS
“நிலத் தகராறில் கொடூரம்” பெற்ற தாய், சகோதரியைக் கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்.. சடலங்களின் அருகிலேயே அமர்ந்திருந்த பயங்கர சம்பவம்..!!
உத்திரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் சைதூபூர் கிராமத்தில், நிலத் தகராறு காரணமாகப் பெற்ற தாய் மற்றும் சொந்தச் சகோதரியைக் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த மகனின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூபேந்திர படேல் என்பவருக்கும், அவரது மூத்த சகோதரி கௌரா தேவிக்கும் இடையே நீண்ட காலமாக நிலப் பகிர்வு தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வயலில் இருந்து பயிர்களை எடுத்து வருவது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பூபேந்திரா கோடாரியால் தனது சகோதரியை ஓங்கி வெட்டியுள்ளார்.
அப்போது மகளைக் காப்பாற்ற ஓடிவந்த தாயையும் அவர் இரக்கமின்றி கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இக்கோரத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த இரட்டைக் கொலையைச் செய்த பிறகு, தப்பியோட முயலாமல் கொல்லப்பட்ட தாய் மற்றும் சகோதரியின் உடல்களுக்கு அருகிலேயே கொலையாளி அமைதியாக அமர்ந்திருந்த காட்சி அங்கிருந்தவர்களை உரைய வைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலையாளி பூபேந்திராவை அந்த இடத்திலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரத்தக் கறைக படிந்த கோடாரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குடும்பத் தகராறில் பெற்ற தாயையும், உடன் பிறந்தவளையும் மகனே வெட்டிக்கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
