LATEST NEWS
நாங்க ஆதரவை வாபஸ் பெற்றால் மந்திரி சபையே இருக்காது.. முத்தரசன் தடாலடி..!!
இடதுசாரிகளின் ஆதரவில்தான் தமிழகத்தில் தவெக ஆட்சி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய அரசியல் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகளின் பலத்தில்தான் தற்போதைய தவெக அமைச்சரவை நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இடதுசாரிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றால் மந்திரி சபையே கவிழ்ந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
இடதுசாரி தலைவர்களான சண்முகமும், வீரபாண்டியனும் தவெக அரசுக்கான தங்களது ஆதரவை எப்போது வாபஸ் பெறுவார்கள் என்று தமிழக ஆளுநர் காத்துக்கொண்டிருப்பதாக முத்தரசன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதவ் அர்ஜுனா விவரம் தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அவரது இந்த அதிரடி விமர்சனம், தவெக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கம்யூனிஸ்டுகளிடம் வம்புக்கு வர வேண்டாம் என அவர் ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
