மு.க.ஸ்டாலின் தோற்றாரா..? அல்லது தோற்கடிக்கப்பட்டாரா..? – பிரகாஷ் ராஜ் அதிரடி கேள்வி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மு.க.ஸ்டாலின் தோற்றாரா..? அல்லது தோற்கடிக்கப்பட்டாரா..? – பிரகாஷ் ராஜ் அதிரடி கேள்வி…!!

Published

on

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோற்றாரா அல்லது தோற்கடிக்கப்பட்டாரா என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மு.க.ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போன்ற முன்னணி மற்றும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது ஒட்டுமொத்த அரசியல் களத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். மக்கள் ஏன் இத்தகையதொரு தேர்தல் முடிவை எடுத்தார்கள் என்பது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த காரணி ஏதேனும் வேலை செய்ததா அல்லது ஏதேனும் முறைகேடுகள் பின்னணியில் இருந்ததா என்பது குறித்தும் விரிவான விசாரணை மற்றும் ஆய்வு தேவைப்படுவதாக பிரகாஷ் ராஜ் வலியுறுத்தியுள்ளார். இந்த எச்.ஐ.ஆர் திருத்த நடவடிக்கையின் காரணமாகப் பல இடங்களில் மக்கள் வீட்டில் இல்லாதபோது அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். எனவே, இந்த வாக்காளர் பட்டியல் நீக்க நடவடிக்கைக்கும் மு.க.ஸ்டாலினின் தோல்விக்கும் தொடர்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என்றார்.

Advertisement

இதே வேளையில், தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசு பொறுப்பேற்று சில மாதங்களே ஆவதால், அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டார். மக்கள் தங்களது ஜனநாயக உரிமையின்படி ஒரு புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளதால் அவர்களுக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தாராளமாகக் கேள்வி கேட்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும், தென்னிந்தியாவின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் தொகுதி மறுவரையறை மசோதா தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், அதனை எந்தக் கட்சி ஆதரித்தாலும் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in