“யாரு சாமி நீ… வீட்ல இருந்த ரூ.4.5 லட்சத்தை திருடி ஃப்ரெண்ட்ஸுக்குப் பிரிச்சுக் கொடுத்த 8-ஆம் வகுப்பு மாணவன்…” மாலையிலேயே ஐபோன் வாங்கி மாஸ் காட்டிய நண்பன்.. ஷாக்கில் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரு சாமி நீ… வீட்ல இருந்த ரூ.4.5 லட்சத்தை திருடி ஃப்ரெண்ட்ஸுக்குப் பிரிச்சுக் கொடுத்த 8-ஆம் வகுப்பு மாணவன்…” மாலையிலேயே ஐபோன் வாங்கி மாஸ் காட்டிய நண்பன்.. ஷாக்கில் பெற்றோர்..!!

Published

on

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கி, கஞ்சர்பூர் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன் வீட்டின் அலமாரியிலிருந்த ரூ.4.5 லட்சம் ரொக்கப் பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடியுள்ளான். அந்தப் பணத்தைப் பையில் அடைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்ற அவன், வகுப்பறையில் இருந்த தனது சக நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளான். அலமாரியில் வைத்திருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், வீடெல்லாம் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மீது சந்தேகமடைந்து விசாரித்துள்ளனர். முதலில் மறுத்த சிறுவன், பின்னர் பெற்றோரின் கண்டிப்பான விசாரணையில் பணத்தைத் திருடிப் பள்ளி நண்பர்களுக்குக் கொடுத்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளான்.

உண்மை தெரிந்ததும் சிறுவனின் பெற்றோர்கள் உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து, முதல்வரிடம் இது குறித்துப் புகாரளித்தனர். பள்ளி நிர்வாகம் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், பல மாணவர்கள் தங்களுக்கு அந்த சிறுவன் பெருந்தொகையைக் கொடுத்ததை ஒப்புக் கொண்டனர். அதில் சிலர் தங்களுக்குக் கிடைத்த பணத்தை அப்படியே திரும்பக் கொடுத்துவிட்ட நிலையில், சிலர் பணத்தைச் செலவு செய்துவிட்டது தெரியவந்தது. இதில் வேடிக்கையான மற்றும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பணம் கிடைத்த அன்றைய தினமே ஒரு மாணவன் மாலையில் மொபைல் கடைக்குச் சென்று தனக்காக ஒரு புதிய ஐபோன் (iPhone) வாங்கியுள்ளான்.

Advertisement

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் அந்த ஐபோனைக் பறிமுதல் செய்து, அம்மாணவனின் பெற்றோர்களையும் பள்ளிக்கு அழைத்துள்ளது. இதுவரை எவ்வளவு பணம் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது, அதில் எவ்வளவு பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதைப் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கணக்கிட்டு வருகின்றனர். அந்தச் சிறுவன் எதற்காக இப்படிச் செய்தான் என்பதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றாலும், இச்சம்பவம் ரூர்க்கி பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in