LATEST NEWS
“விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு..!” ஆனா ‘அந்த’ ஒரு விஷயத்துல தப்பு பண்ணிட்டாரு… காங்கிரஸ் எம்பி ஓப்பன் டாக்..!!
தவெக ஆட்சியில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் தங்களது மக்கள் பிரதிநிதித்துவப் பதவிகளை ராஜினாமா செய்த அதே நபர்களுக்குத் தற்போதைய இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தவெக தலைமை சீட் கொடுத்திருக்கக் கூடாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தார்மீக ரீதியாகத் தவெக கட்சியின் உழைத்த சொந்தக் காரர்களுக்கே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளித்து சீட் கொடுத்திருக்கலாம் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது என்றும் அவர் தனது பேட்டியில் கணித்துக் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் தவெக அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால், சட்டமன்றத்தில் அவர்களுக்குக் கூடுதல் எம்.எல்.ஏ-க்கள் தற்சமயம் தேவையில்லை என்றும், இப்போது தவெக வசம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே தாராளமாக மீதமுள்ள 5 ஆண்டுகால ஆட்சியை விஜய் முழுமையாக நடத்தி முடிக்க முடியும் என்றும் கார்த்தி சிதம்பரம் விளக்கியுள்ளார். தவெக-வின் தேர்தல் உத்திகள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள இந்த வெளிப்படையான விமர்சனம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது.
