LATEST NEWS
குளுக்கோஸ் பாட்டிலில் பாத்ரூம் தண்ணீர்… நோயாளியின் உயிரோடு விளையாடுவதா..? திருவள்ளூர் அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு, கழிவறை குழாயில் தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளித்ததாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை ஊழியரின் இந்த விபரீத செயலை மூக்கில் டியூப் பொருத்தப்பட்டிருந்த நிலையிலேயே அந்த நோயாளி கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முதலில் அது ‘பிஸ்லரி வாட்டர்’ என்றும், பின்னர் ‘சிங்க் தண்ணீர்’ என்றும் ஊழியர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த நிலையில், “பாத்ரூம் தண்ணிய எதுக்கு குளுக்கோஸ் பாட்டில்ல ஊத்துறீங்க? நீங்க டாக்டரா?” என்று நோயாளி ஆவேசமாகக் கேள்வி எழுப்பி டியூபைக் கழற்றச் சொல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
https://www.instagram.com/reel/DdocHk6FeZh/?utm_source=ig_web_button_share_sheet
பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய அலட்சியமான மற்றும் அசுத்தமான மருத்துவச் செயல்முறைகள் அரசு பொது மருத்துவமனைகளின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இந்த விவகாரம் பொதுவெளியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதால், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசின் சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். தவறிழைத்த தற்காலிக அல்லது நிரந்தர ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற அலட்சியப் போக்குகள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.
