LATEST NEWS
திருட்டு கூட்டணி போட.. அதிமுக MLA-க்கள் ராஜினாமா செய்தது ஏன்..? உண்மையை உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்..!!
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஒரு ‘திருட்டுக் கூட்டணி’ அமைக்க முயன்றதன் காரணமாகவே அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்று தமிழக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தவெக வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள பேராதரவை எதிர்கொள்ள முடியாமல், வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திமுகவும் அதிமுகவும் இவ்வாறு கைகோர்க்கத் துணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவுடன் ரகசியமாகப் கூட்டணி வைக்க அதிமுக தலைமை முடிவு செய்ததால், கொள்கை மாறுபாடு காரணமாக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளைத் துறந்ததில் எவ்விதத் தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்தத் துரோகச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
