அய்யோ கொடுமையே… பள்ளியில் திடீரென சரிந்து விழுந்த படிக்கட்டு.. இடிபாடுகளில் சிக்கி 9 வயது பள்ளி மாணவி பரிதாப பலி… கதறித் துடிக்கும் குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே… பள்ளியில் திடீரென சரிந்து விழுந்த படிக்கட்டு.. இடிபாடுகளில் சிக்கி 9 வயது பள்ளி மாணவி பரிதாப பலி… கதறித் துடிக்கும் குடும்பம்..!!

Published

on

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள மான்சி மண்டலத்தின் அமனி பஞ்சாயத்தில் இயங்கி வரும் ஜடாதர் மிஸ்ரா அரசு தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை அன்று சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளியில் மாணவர்கள் படிக்கட்டு வழியாக கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென படிக்கட்டின் ஒரு பகுதி உடைந்து ஒட்டுமொத்த படிக்கட்டும் இடிந்து விழுந்தது. இதில் படிக்கட்டில் இருந்த குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் உடனடியாக இடிபாடுகளை அகற்றி குழந்தைகளை மீட்டனர்.

இந்த விபத்தில் அமனி பஞ்சாயத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரின் 9 வயது மகள் ரிதிகா குமாரி படுகாயமடைந்தார். அவர் உடனடியாக ககாரியா சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 3 முதல் 4 குழந்தைகள் மான்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினரும் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி படிக்கட்டு ஏற்கனவே மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவித்தும் எந்தவித பராமரிப்புப் பணிகளும் செய்யப்படவில்லை என்றும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் குற்றம் சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்டிஓ தனஞ்சய் குமார் கூறுகையில், இந்த படிக்கட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in